அஸ்டன் மார்ட்டின் அணியானது நீண்ட கால இடைவெளிக்கு பின் Formula 1 பந்தயத்திற்கு 2021 ஆம் ஆண்டு திரும்பியது. இவ்வணி முதன் முறையாக 1960 காலப்பகுதியில் இப்பந்தயத்தில் கலந்துகொண்டது. பின் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ரெட் புள் ரேஸிங் அணியின் முதன்மை அனுசரனையாளராகவும் செயற்பட்டு வந்தது. ஆனால் அஸ்டன் மார்ட்டின் அணியானது ஒரு புதுமுக அணியாக 2021 ஆம் ஆண்டு இப் பந்தயத்தில் நுழையவில்லை. மாறாக ஏற்கனவே இப்பந்தயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்த ரேஸிங் பொயிண்ட் எனும் அணியின் உரிமையாளரும் கனேடிய நாட்டு கோடீஸ்வரருமான லோரன்ஸ் ஸ்ரோல், அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தில் 16.7% பங்குகளை அவரின் முதலீட்டாளரிகளின் உதவியுடன் கொள்வனவு செய்ததின் மூலமாக அவரின் ரேஸிங் பொயிண்ட் அணியினை அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் Formula 1 இற்கான உத்தியோக பூர்வ அணியாக மாற்றியமைத்தார். இந்த மாற்றத்தின் முதற்படியாக நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற செபாஸ்டியன் வெட்டல் ஐ…