இளம் கண்டுபிடிப்பாளர்கள் வழமைகளுக்கு அப்பாற்பட்டு, எதிர்பார்புகளை மீறி ஒரு பிரச்சினைக்கான தீர்வினை எவ்வாறு அணுகுகின்றோம் என்பதனை மாற்றியமைத்துள்ளனர். இவ் இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்புகளானது சூழல் நேய தீர்வுகளில் ஆரம்பித்து, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வரை நீண்டு அவற்றின் பலனாக தொழில்களில் மாற்றங்கள், சமூக முன்னேற்றம் என இவ்வுலகில் ஒரு நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் அசுரவளர்ச்சியடையும் இக்காலத்தில் திறமையுள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களினை காணக்கிடைப்பது ஊக்கமூட்டும் வகையில் உள்ளது. இவ் இளம் கண்டுபிடிப்பாளர்கள் அவர்களின் உள்ளார்ந்த ஆர்வம் மற்றும், துணிச்சல் காரணாமாக தனித்துவமாக தெரிகின்றனர். இவர்கள் தனித்துவமான மற்றும் முற்றிலும் மாறுபட்ட அனுகுமுறைகளை கொண்டு நவீன பிரச்சினைகளுக்கு தீர்வுகான முனைகின்றனர்.
SL வெப் காஸ்டில் பணியாற்றும் பிஷ்மா பாகிர் ஆகிய நான் அண்மையில் நாவலப்பிட்டியை சேர்ந்தவர்களும் ஓக்ஸ்போர்ட் சர்வதேச பாடசாலையில் தமது கல்வியினை தொர்பவர்களுமான சாமிக ஹசரால் மற்றும் ஒஹாஸ செத்தினு எனும் இரண்டு திறமையான மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். இவ்விரண்டு மாணவர்களும் தரம் 7 இல் கல்விகற்பதுடன் பிளாஸ்டிக் கழிவு போத்தல்களைக்கொண்டு புதிய மற்றும் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் திறமைகொண்டவர்களாவர். இவர்களின் கண்டுபிடிப்புகளில் நீரியல் இயந்திரங்கள், நீர் விநியோகிப்பான் மற்றும் ஒளிப் பேனா என்பன அடங்கும்.
பிள்ளைகளின் வாழ்விற்கு உறுதுணையாகவிருக்கும் பெற்றோர்களினால் கிடக்கும் பலன்களை நோக்கும் பொழுது அது மிகவும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. இவ்விரண்டு மாணவர்களினதும் இவ் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு அவர்களின் தந்தைமார்களின் பங்களிப்பானது மிகவும் முக்கியமானதாகும். இந்த நேர்காணலின் போது சமிக மற்றும் ஒஷாத அவர்களின் கண்டுபிடிப்புகளில் சிலவற்றினை எனக்கு காண்பித்தனர். இதன் போது அவர்களின் நீரியல் இயந்திரத்தை எவ்வாறு பிளாஸ்டிக் குழாய்கள், பழைய காற்றுப்பம்பி மற்றும் ஸிரிஜ் என்பவற்றின் உதவியுடன் உருவாக்கினர் என்பது பற்றி எனக்கு விளக்கமளித்தனர். அத்துடன் இவ்வியந்திரமானது பொருட்களை உயர்த்தும் திறனை கொண்டுள்ள படியினால் அவர்களின் பாடசாலை விஞ்ஞான செயற்றிறங்களின் பொழுது மிகவும் உதவிகரமான அமைந்தது என்றும் குறிப்பிட்டனர்.
அத்துடன் அவர்கள் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களினால் தயாரிக்கப்பட்ட நீர் வினியோகிப்பானானது நீரை சிக்கனப்படுதுவதுடன் மட்டுமல்லாது அதனை உபயோகிப்பதனயும் இலகுவாக்கியுள்ளது. அவர்களின் ஆர்வமூட்டும் வகையிலானா கண்டுபிடிப்பான ஒளிப்பேனாவினைப் பற்றியும் அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். இவ் ஒளிப்பேனாவானது பிளாஸ்டிக் போத்தல், ளேD விளக்கு மற்றும் சில கம்பிகளைக்கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. மின்சாரம் மற்றும் மின்சுற்றுக்களைப் பற்றி இதன் மூலமாக கற்பது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருந்தது.இவ்வாக்கங்களை காண நேரிட்ட பின்பு நாம் எவ்வாறெல்லாம் பிளாஸ்டிக் பொருட்களை இது போன்று மீள பாவனைக்கு உட்படுத்துவதன் மூலம் நமது பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கலாம் என்பது எனக்கு புரியவந்தது.
நேர்காணலின் முடிவில் சாமிக மற்றும் ஒசாதவிடம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள இளம் வயதினருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என வினவியபோது, என்றும் உன்கள் ஆர்வங்களை விட்டுகொடுக்காதீர்கள் என்பதே அவர்களின் பதிலாக இருந்தது. நான் இவ்விரு மாணவர்களிடமிருந்தும் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள முடியும். அவற்றில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அத்துடன் உறுதுணையான பெற்றோற்கள் என்வற்றின் உதவியானது அவர்களை இவ்வாறான கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்த்தியுள்ளது. இது எவராலும் அவர்களின் வளங்கள் மற்றும் திறமையினை பயன்படுத்தி சமூகத்திலும் உலகிலும் நேர்மறையான மாற்ற்ங்களை கொண்டு வர முடியும் என்பதனை பறைசாற்றுகின்றது.
இம்மாணவர்களை சந்திக்க கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் இவர்களின் கதையினை ஏனையோரிடம் பகிருவதன் மூலம் இவர்களைப்போன்றே இன்னும் பலர் தமது அவர்களின் ஆர்வங்கள் மற்றும் கனவுகளை முன்னோக்கி செல்ல இது உந்துதலாக அமையும் என எதிர்பார்கின்றேன்.
சாமிக மற்றும் ஒஷாத இருவரும் தமது விஞ்ஞான பாட பயிற்றுவிப்பாளர் மற்றும் ஒக்ஸ்போர்ட் சர்வதேச பாடசாலை நிர்வாகத்திற்கு தமது நன்றியினையும் தெரிவித்துகொண்டனர். எமது நேர்கானலின் போது இவர்கள் இருவரும் தமது விஞ்ஞான பாட ஆசிரியையான ரமணா ஸ்ரீ மதுபாஷினி அவர்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மீது அவர்களுக்கிருந்த ஆர்வத்திற்கு எவ்வாறு உரமூட்டினார் எனவும் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் ஆசிரியர் என்பத்னையும் தாண்டி மிஸ் ரமணா ஸ்ரீ மதுபாஷினி அவர்கள் பெறுமதிமிக்க அறிவுரைகள் வழங்குவதற்கூடாகவும் அவைகளை தொடர்ந்து உற்சாகப்படுத்துவத்ற்கூடாகவும் சாமிக மற்றும் ஒஷாத இருவரினதும் புத்தாக்க பயணத்தில் ஓர் அடிக்கல்லாக திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டனர்.
மேலும் அவர்கள் கூறும் போது, தமது பாடசாலை நிர்வாகமானது இப்புத்தாக்க பயணத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் பாரிய அளவு பங்காறியுள்ளது எனவும் குறிப்பிட்டனர். இது பற்றி பாடசாயின் அதிபர் எஸ் சட் அஸ்மி குறிப்பிடும் பொழுது, தமது பாடசாலையானது இவ்வாறான திறமைமிக்க மாணவர்களை வலுவூட்டும் வகையில் செயற்படுவதை எண்ணி பெருமிதம் அடைவதாகவும் கூறினார். அது மட்டுமல்லாது இவ்வாறான மாணவர்களை அவர்களின் துறையில் முன்னேறிச்செல்ல உந்துகோலாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிட்டார். அத்துடன் இம் மாணவர்கள் இவ்வாறான சாதனைகளை புரிய பக்க பலமாக நின்றுதவிய ஆசிரியர்கள், உதவி ஊழியர்கள், அத்தோடு இம் மாணவர்களின் பெற்றொர்களுக்கும் தமது நன்றியினை தெரிவித்து கொண்டார். பாடசாலையில் கல்வி கற்கும் ஏனைய மாணவர்கள் சமிக மற்றும் ஒஸாத ஆகிய இருவரையும் ஓர் முன்மாதிரியாக பார்க்கின்றனர் எனவும் என்னிடம் கூறினார். இவர்களின் இந்த சூழல் நிலைத்தன்மை மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி சம்பந்தமான புத்தாக்கங்களானது பாடசாலையான்து சிவில் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய பொறுப்புகளுடன் ஒத்துபோவதாகவும் குறிப்பிட்டார்.
இறுதியாக ஒசாத மற்றும் சாமிக இருவரும் அவைகளின் ஏனையோரிடமும் பகிர காரணமாகவிருந்த SL வெப்கஸ்ர் இற்கு தமது நன்றியினை தெரிவித்து கொண்டனர். அவர்கள் தமது பெற்றோர், ஆசிரியை, பாடசாலை நிர்வாககம் மற்றும் அதிபர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, இவ்வாறன திறமையாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் ஊடகங்களுக்கு இருக்கும் பங்களிப்பினனையும் பற்றி குறிப்பிட்டனர். இவாறான பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கிவரும் SL வெப் கஸ்ட் அணியிற்கு அவர்க்ள் வாழ்து தெரிவித்ததோடு தமது நன்றியினையும் தெரிவித்து கொண்டனர்.
இறுதியாக இக்கட்டுரையானது இரண்டு இளம் கண்டுப்டிப்பாளர்களின் சாதனைகளை எடுத்துகூறுவதோடு அவர்கள் இந்நிலையை அடைய உதவியாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் பங்களிப்பை முன்னிறுத்துகிறது. அத்துடன் புத்தாக்கங்களை நாம் வரவேற்று அதில் முனைப்புடன் செயற்படும் மாணவர்களை ஊக்கபடுத்தவேன்டிய அவசியம் மற்றும் அதன் மூலம் உலகில் ஓர் நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துவதனை பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.