• முகப்பு பக்கம்
  • மொழிகள்
    • English
    • සිංහල
  • தலைப்புகள்
    • கல்வி
    • உடல்நலம்
    • விளையாட்டு
    • வாழ்க்கைமுறை
    • நிதி மற்றும் வர்த்தகம்
    • தற்போதைய நிகழ்வுகள்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • அமைப்பு
    • Fête
    • Team
    • Welfare
    • எங்களை பற்றி
    • தொடர்பில் இருங்கள்
    • கொள்கைகளும் அறிக்கைகளும்
Facebook Twitter Instagram Pinterest LinkedIn WhatsApp Telegram YouTube
SL WebCast தமிழ்
  • முகப்பு பக்கம்
  • மொழிகள்
    • English
    • සිංහල
  • தலைப்புகள்
    • கல்வி
    • உடல்நலம்
    • விளையாட்டு
    • வாழ்க்கைமுறை
    • நிதி மற்றும் வர்த்தகம்
    • தற்போதைய நிகழ்வுகள்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • அமைப்பு
    • Fête
    • Team
    • Welfare
    • எங்களை பற்றி
    • தொடர்பில் இருங்கள்
    • கொள்கைகளும் அறிக்கைகளும்
SL WebCast தமிழ்
Home»தற்போதைய நிகழ்வுகள்»ஊடகத்தின் தியாகம்
தற்போதைய நிகழ்வுகள்

ஊடகத்தின் தியாகம்

மொழிபெயர்ப்பு : Shimla Wakeel
Alejandro EnriqueBy Alejandro Enrique03/11/2022Updated:03/11/2022No Comments7 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Telegram

உலகெங்கிலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் அதிக எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் இதழியல் நடைமுறை அதிக ஆபத்துள்ள ஒரு தொழிலாக மாறியுள்ளது, இது கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, உலகின் பல பிராந்தியங்களில், ஊடக ஊழியர்களின் இறப்புக்கள் அதிகரித்துள்ளன.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை வைத்திருக்கும் நான்கு முக்கிய உலக அமைப்புகள், பத்திரிகையாளர்களின் சர்வதேச சம்மேளனம் (ஐ.எஃப்.ஜே), பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (சி.பி.ஜே), எல்லைகளற்ற நிருபர்கள் (ஆர்.எஸ்.எஃப்) மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஆகியவை நடத்திய விசாரணையில், கொல்லப்பட்ட நிருபர்களின் எண்ணிக்கை அபாயகரமான அதிகரிப்பை வெளிப்படுத்தியது.

2021 ஆம் ஆண்டில் சூழலில் வைக்க, ஒவ்வொரு நிறுவனமும் ஒருவருக்கொருவர் வெவ்வேறு எண்களை அறிவித்தன, ஆனால் இந்த 2022 உடன் ஒப்பிடும்போது அவை குறைவாக உள்ளன; எடுத்துக்காட்டாக, ஐஎஃப்ஜே தனது ஆண்டறிக்கையில் 47 பத்திரிகையாளர்கள் அல்லது ஊடகத் தொழிலாளர்கள் உலகெங்கிலும் தங்கள் தொழில் தொடர்பான சம்பவங்களில் கொல்லப்பட்டு இறந்ததாக அறிவித்தது.

“வருடாந்த அறிக்கை, அதன் 31 வது பதிப்பில், கடந்த ஆண்டில் 47 பத்திரிகையாளர் கொலைகள் நடந்த சூழ்நிலைகளை பதிவு செய்கிறது, இதில் இலக்கு தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் மற்றும் குறுக்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் 2 தற்செயலான மரணங்கள் ஆகியவை அடங்கும்” என்று சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது்

இருப்பினும், அக்டோபர் 2022 நிலவரப்படி, ஐ.எஃப்.ஜே 59 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டை விட 12 பேர் அதிகம் என்றும், இது 125 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுக்கான சிபிபி எண்களைப் பார்க்கும்போது, உறுதிப்படுத்தப்பட்ட அல்லது இன்னும் உறுதிப்படுத்தப்படாத காரணங்களுக்காக 45 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டனர், இருப்பினும், இந்த 2022 அக்டோபரில் உள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கை 57 நிருபர்களாக உயர்ந்துள்ளது, மேலும் 8 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், இது இன்று வரை 126 சதவீத அதிகரிப்புடன் சமம், இதில் 35 வழக்குகளில் மட்டுமே நோக்கத்தை அறிய முடிந்தது.

2021 ஆம் ஆண்டில் எ வகையில், இந்த எண்ணிக்கையானது 51 அளவிலான பத்திரிகையாளர்கள் நிருபர்கள் மற்றும் ஊடக ஒத்துழைப்பாளர்கள் என காணப்பட்டது, இந்த பட்டியலில் பத்திரிகையாளர்களாக அவர்களின் செயல்பாடுகளால் நிச்சயமாக கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே அடங்குவர். மறுபுறம், 2022 ஆம் ஆண்டில், ஆர்.எஸ்.எஃப் இன்றுவரை 50 நிருபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடுகிறது, இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுவதற்கு நெருக்கமாக உள்ளது.

யுனெஸ்கோ தனது பங்கிற்கு, 2021 ஆம் ஆண்டில் உலகளவில் 55 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது, மாறாக, இந்த ஆண்டு அக்டோபர் 2022 க்கு இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது, 74 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது, அதாவது, 19 பத்திரிகையாளர்கள், அதாவது அண்ணளவாக 134 சதவீத உயர்வு காணப்படுகின்றது. 

ஊடகவியலில் பயிற்சி செய்ய மிகவும் ஆபத்தான பகுதிகள்

லத்தீன் அமெரிக்கா

இன்றுவரை, இலத்தீன் அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி ஊடகத் தொழிலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது.

2021 ஆம் ஆண்டில் 10 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கணக்கிட்டுள்ளது, 2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, சுமார் 26 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், கடந்த ஆண்டை விட 16 இறப்புகள் அதிகம், இது 260 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு 2021 ஆம் ஆண்டில் 17 ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது, இருப்பினும், 2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 26 கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 9 அதிகமாகும், இது 152 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆர்.எஸ்.எஃப், 2021 இல் 9 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதாக அறிவித்தது, ஆனால் 2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24 ஊடக தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக என எண்ணிக்கை பாரியளவில் உயர்ந்துள்ளது, இது 266 சதவீத அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

யுனெஸ்கோ 2021 ஆம் ஆண்டிற்கான அதன் கொலை புள்ளி விவரங்கள் 14 ஆகக் கூறப்படுகின்றது, ஆனால் 2022 ஆம் ஆண்டில் அதன் புள்ளிவிவரங்களில் 36 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இது 257 சதவீதம் உயர்வாகும்.

மெக்சிகோ, ஹைட்டி மற்றும் கொலம்பியா ஆகியவை கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடுகளாகும்.

ஆசியா

ஆசியக் கண்டம் ஊடகவியலைப் பயிற்சி செய்யும் இரண்டாவது மிகவும் ஆபத்தான பிராந்தியம் ஆகும், இருப்பினும் புள்ளிவிவரங்கள் இலத்தீன் அமெரிக்கா அளவுக்கு அதிகரிப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், இந்த எண்ணிக்கை இன்னும் வியக்கத்தக்கதாக உள்ளது.

2021 ஆம் ஆண்டில் ஐ.எஃப்.ஜே 21 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது, 2022 ஆம் ஆண்டில் 14 நிருபர்கள் கொல்லப்பட்டதாக அது கணக்கிட்டது.

2021 ஆம் ஆண்டில், பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தனது அறிக்கையில் 20 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 2022 ஆம் ஆண்டில் 11 ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது.

இதற்கிடையில், எல்லைகளற்ற நிருபர்கள், 2021 ஆம் ஆண்டில் 24 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது, மேலும் 2022 ஆம் ஆண்டில் அதன் 

கொல்லப்பட்ட எண்ணிக்கை 6 எனவும் கூறப்படுகின்றது. எனவே இறுதியாக, 2021 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ 24 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது, இருப்பினும், 2022 இல் அவர்களின் புள்ளிவிவரங்கள் 19 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக என கணக்கிடும்போது, இதன் ஆபத்தான நிலை தெளிவாகிறது.

2021 ஆம் ஆண்டில் ஐ.எஃப்.ஜே மற்றும் யுனெஸ்கோவைப் பொறுத்தவரை, புள்ளிவிவரங்கள் பசுபிக் சமுத்திரத்தை அண்டிய பிரதேசங்களையும் உள்ளடக்கியது. யுனெஸ்கோவின் 2022 புள்ளிவிவரங்களில் பசுபிக் சார்ந்த இடங்களும் அடங்கும். பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகியவை ஆசியா மற்றும் பசுபிக் சார்ந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

 

ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகள்

முந்தைய இரண்டு பிராந்தியங்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ஆபிரிக்காவும் மத்திய கிழக்கும் நல்ல நிலையில் இருக்கும் என்று மதிப்பிடலாம். இருப்பினும், இந்த இரண்டு அண்டைப் பிராந்தியங்களும் கடந்த ஆண்டைப் பொறுத்தவரையில் அவற்றின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காணவில்லை, ஆனால் அவை இன்னும் இதழியல்  நடைமுறைக்கு இணங்க ஆபத்தான இடங்களாகவே உள்ளன.

புள்ளி விவரங்கள் பின்வருமாறு:

ஆப்பிரிக்கா 2021ஆப்பிரிக்கா 2022
IFJ 9IFJ 10
CPP 7CPP 2
RSF 6RSF CD1
UNESCO 10UNESCO 5
மத்திய கிழக்கு 2021மத்திய கிழக்கு 2022
IFJ 3IFJ 2
CPP 5CPP 2
RSF 8RSF 9
UNESCO 2UNESCO 4

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

இதற்கிடையில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் புள்ளிவிவரங்கள் முந்தைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் மாறிவிட்டன, இரண்டுமே அவற்றின் எண்ணிக்கையை, குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தை, அஜர்பைஜான், கஸகஸ்தான் போன்ற பிராந்தியங்களில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக அதிகரித்துள்ளன, இது உக்ரேனியப் போர் காரணமாக ஒரு பாரிய அதிகரிப்பு காணப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்கா2021ஐக்கிய அமெரிக்கா2022
IFJ 0IFJ 1
CPP 0CPP 1
RSF 0RSF 1
UNESCO 0UNESCO 1
ஐரோப்பா 2021ஐரோப்பா 2022
IFJ 6IFJ 14
CPP 5CPP 17
RSF 6RSF 9
UNESCO 6UNESCO 12

குறிப்பிடத்தக்க மூன்று வழக்குகள்

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் அனைத்து வழக்குகளும் முக்கியமானவை என்றாலும், மூன்று வழக்குகள் பொதுக் கருத்தில் மிகவும் முக்கியமானவை, கடைசி வழக்கு சூழ்நிலைகள் காரணமாக மிகவும் விசித்திரமானது.

ஷிரீன் அபு அக்லேஹ்

அல்-ஜசீரா பாலஸ்தீனிய-அமெரிக்க நிருபர் மே 11, 2022 அன்று மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையைப் பற்றி செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அல்-ஜசீரா அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தின் வீடியோக்களில், அவர் “பிரஸ்” என்ற வாசகத்துடன் கூடிய சீருடையை அணிந்திருப்பதைக் காணலாம்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, 51 வயதான அபு அக்லெஹ் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், சிறிது நேரத்திற்குப் பிறகு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கட்டார் நாட்டை தளமாகக் கொண்ட அல்-ஜசீரா அவரது கொலையைத் தொடர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன், இஸ்ரேலிய படைகள் அபு அக்லேவைத் தாக்கியதாக கூறியது.இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் ட்விட்டர் தளத்தில் ஒரு அறிக்கையில் இந்த குற்றச்சாட்டை மறுத்தார், அதே நேரத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டாம் நீட்ஸ் ஒரு ட்விட்டர் செய்தியில் அபு அக்லே ஒரு அமெரிக்க குடிமகன் என்பதை உறுதிப்படுத்தினார், மேலும் அவரது மரண சூழ்நிலைகள் குறித்து முழு விசாரணைக்கும் அழைப்பு விடுத்தார்.

அபு அக்லே மே 13, வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பல பாலஸ்தீன நகரங்களில் கௌரவிக்கப்பட்டார். பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மே 12 அன்று ரமல்லாவில் தனது அரசு சேவையில் பொதுவாக பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்ட “ஜெருசலேம் நட்சத்திரம்” பதக்கத்தை அவருக்கு வழங்கினார், மேலும் அவரை “உண்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான தியாகி” என்று அழைத்தார். மே 13ம் திகதி, ஆயிரக்கணக்கான துக்கம் அனுசரித்தவர்கள் ஜெருசலேமில் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். அப்போது இஸ்ரேலிய போலீசார் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட மருத்துவமனைக்குள் நுழைந்து, அவரது சவப்பெட்டியை ஏந்தியபடி துக்கம் அனுசரித்தவர்களைத் தாக்கினர்.

அவரது வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கூட கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பியர் ஜாக்ர்ஜெவ்ஸ்கி

பிரெஞ்சு-ஐரிஷ் ஒளிப்புகைப்படவியாளாளர். பியர் ஜக்ர்ஜெவ்ஸ்கி மார்ச் 14, 2022 அன்று, ஃபாக்ஸ்(FOX) செய்திகளின் பணியில் இருந்தபோது, கீவுக்கு வெளியே உள்ள உக்ரேனிய நகரமான ஹோரென்காவில் கொல்லப்பட்டார். அமெரிக்க வலைத்தளம் அதன் அறிக்கையில், ஜாக்ர்ஜெவ்ஸ்கி மற்றும் ஊடகத்தின் பிற பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் “உள்வரும் தீயினால் தாக்கப்பட்டது” என்று சுட்டிக்காட்டியது.

இதே தாக்குதலில் ஃபாக்ஸ் செய்திகளின் உக்ரேனிய ஊடகவியல் தயாரிப்பாளர் ஒலெக்சாண்ட்ரா குவ்ஷினோவாவும் நிருபர் பெஞ்சமின் ஹாலும் கொல்லப்பட்டனர்.

உக்ரேனிய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ  டெலிகிராமில் குழு ரஷ்யப் படைகள் சுட்ட பீரங்கிகளால் தாக்கப்பட்டது என்று பதிவு செய்தார். உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy மார்ச் 16 அன்று ஒரு உரையில் ரஷ்ய பீரங்கித் தாக்குதலால் தாங்கள் கொல்லப்பட்டதாக கூறினார். ஆனால், செய்தி அறிக்கைகளும் ஃபாக்ஸ் செய்திகளின் அறிக்கையும் இத்தாக்குதலின் ஆதாரம் என்று கூறப்படுவதைக் குறிப்பிடவில்லை.

ஈராக் முதல் ஆப்கானிஸ்தான், சிரியா வரை போர் மண்டலங்கள் மற்றும் ஃபாக்ஸ் செய்திகளின் சர்வதேசக் கதைகளை உள்ளடக்கிய புகைப்படக் கலைஞராக இருந்தவர் பியர். அவர் பிப்ரவரி 2022 முதல் உக்ரைனில் இருந்தார்.

அர்ஷத் ஷெரீப்

தெற்காசிய நாட்டின் இராணுவத்தை விமர்சித்ததற்காக தனது நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் கென்யாவில் பதுங்கியிருந்ததால் பாக்கிஸ்தானிய பத்திரிகையாளர் அர்ஷத் ஷெரீப்யின் வழக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 24, திங்களன்று நைரோபிக்கு அருகிலுள்ள சாலைத் தடையில் நிறுத்துவதற்குப் பதிலாக அவர் பயணித்த கார் முடுக்கிவிடப்பட்ட பின்னர் அர்ஷத் ஷெரீப் கென்ய போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய இதேபோன்ற காரைத் தேடும் போது இது “தவறான அடையாளம்” என்று கூறி, ஆப்பிரிக்க நாட்டில் உள்ள போலீசார் இந்த சம்பவத்திற்கு அவரது அனுதாபத்தினை தெரிவித்தனர். 50 வயதான அர்ஷத் ஷெரீப், பிரதம மந்திரி ஷாபாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தை விமர்சிப்பவராகவும் இருந்தார் என்ற உண்மையால் இந்த வழக்கு அதிர்ச்சியளிக்கிறது.

நைரோபி-மாகடி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனை செய்யும் பீடம் வழியாக தனது சகோதரர் குர்ரம் அகமதுவுடன் பயணம் செய்த கார், முக்கிய பாதையில் பயணிக்கும் வாகனங்களை சோதனையிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு நவாஸ் ஷெரீப்பின் தலையில் சுடப்பட்டதாக நைரோபி போலீசார் தெரிவித்தனர். அவர்கள் மாகடி நகரத்திலிருந்து கென்யத் தலைநகருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அவரது இருப்பிடம் பகிரங்கமாக அறியப்படவில்லை; துபாய், ஐக்கிய அரபு இராச்சியம், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அவர் நேரத்தைச் செலவிட்டார் என்பது அவரது நண்பர்களில் பெரும்பாலானோருக்கு மட்டுமே தெரியும்.

நைரோபி போலீசார் குழு இந்த வழக்கை மேலும் விசாரணைக்காக அதன் மேலிடமான சுயாதீன போலீஸ் கண்காணிப்பு ஆணையம் எடுத்துக் கொள்ளும் என்று தெரிவித்தது.

2022 Africa Europe IFJ Latin America media middle east murder protectjournalists South Asia UNESCO US
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email Telegram
Previous Articleவலுக்கட்டாயமாக கடத்தப்படுதலும், வளர்ந்து வரும் அச்சுறுத்தலும்
Next Article கத்தார் எமிரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு நுண்ணறிவு
Alejandro Enrique
  • Website

Related Articles

தற்போதைய நிகழ்வுகள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

25/11/2023By Ishfa Ishak
தற்போதைய நிகழ்வுகள்

IMF: பொருளாதார மீட்பு

10/05/2023By Shabeeha Harshad
தற்போதைய நிகழ்வுகள்

கற்பழிப்பு: ஒரு சமூக தீமை

26/03/2023By Bishma Bakeer
தற்போதைய நிகழ்வுகள்

யமனின் அவல நிலை

28/02/2023By Shimla Wakeel

Comments are closed.

Advertisement
தவறவிடாதீர்கள்
தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

By Ishfa Ishak25/11/2023

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையானது,  உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் ஒரு மனித உரிமை மீறல்…

உலக சுற்றுலா தினம்: அதன் கவர்ச்சியான சாராம்சத்தில் ஒரு பயணம்

27/09/2023

சர்வதேச எழுத்தறிவு தினம் 2023

08/09/2023

உலக மனிதாபிமான தினம்

19/08/2023
நமது மொழிகள்
  • English
  • සිංහල
எங்கள் தலைப்புகளை ஆராயவும்
  • கல்வி
  • உடல்நலம்
  • விளையாட்டு
  • வாழ்க்கைமுறை
  • நிதி மற்றும் வர்த்தகம்
  • தற்போதைய நிகழ்வுகள்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
எங்கள் அமைப்பு
  • Fête
  • Team
  • Welfare
  • எங்களை பற்றி
  • தொடர்பில் இருங்கள்
  • கொள்கைகளும் அறிக்கைகளும்
Facebook Twitter Instagram WhatsApp Telegram YouTube LinkedIn
© 2025 SL WebCast. All rights reserved.Consultation by ExperGen

Type above and press Enter to search. Press Esc to cancel.

Sign In or Register

Welcome Back!

Login to your account below.

Lost password?